Published on 01/03/2022 | Edited on 01/03/2022

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு வருகை தந்த ஸ்டாலின் இருவரது நினைவிடங்களிலும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.