Skip to main content

ஆட்சி மாறும் நகைகடன் தள்ளுபடியாகும்னு சொல்லி அட்டைய வாங்கினாங்க.. வங்கியில் மாலை முதல் விசாரணை

Published on 06/05/2019 | Edited on 07/05/2019

 


   புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13.75 கிலோ வாடிக்கையாளர்களிடம் அடகு வாங்கிய தங்க நகைகளை காணவில்லை என்று வங்கி முதுநிலை மேலாளர் மாரீஸ்கண்ணன் புகார் கொடுத்திருந்தார்.   அதாவது,  அதே வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்த திருக்கட்டளை மாரிமுத்துவின் கார் எரிக்கப்பட்ட நிலையில் காணாமல் போனார். 5 நாட்களுக்கு பிறகு மாரிமுத்துவின் சடலம் கோடியக்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய பிறகு 6 வது நாள் புகார் கொடுத்துள்ளார். 

 

b

 

அந்த புகாரில் இறந்த மாரிமுத்து நகைகளை எடுத்திருக்கலாம் என்பது போல ஒருவர் மேல் மட்டுமே சந்தேகத்தை கிளப்பியுள்ளது மக்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.  அலுவலக உதவியாளரிடம் எப்படி சாவிகள் போனது. அப்படியானால் மாரிமுத்து சாவிலும் மர்மம் உள்ளது. வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்து நகைகளை திருடிவிட்டு மாரிமுத்துவை மட்டும் மாட்டிவிடும் முயற்சியாக அவரை கொலை செய்தார்களா அல்லது அவரை தற்கொலைக்கு தூண்டினார்களா என்பது முதலில் தெளிவாக வேண்டும் என்கின்றனர்.


இந்த நிலையில் பல வாடிக்கையாளர்களும் தங்கள் நகைகளை திருப்ப வந்த போது,  மத்தியில் ஆட்சிமாற்றம் வரும்.  அப்ப நகை கடன் தள்ளுபடியாகும்.  அதனால இப்ப திருப்ப வேண்டாம் என்று பல வாடிக்கையாளர்களிடம் வங்கி ஊழியர்கள் சொன்னதுடன் பலரது நகை அடகு வைத்த அட்டைகளையும் வாங்கி வைத்துக் கொண்டதாக பல வாடிக்கையாளர்களும் புகார் கூறுகின்றனர்.

 

b

   

இந்த நிலையில் தான்  இன்று மதியம் இறந்த வங்கி ஊழியர் மாரிமுத்துவின் மோட்டார் சைக்கிளை போலிசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து டி எஸ் பி ஆறுமுகம், மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மாலை 6 மணிக்கு பிறகு  வங்கியில் வங்கி அதிகாரிகளிடம் விசாரனை தொடங்கியுள்ளனர். இரவு 8 மணியை கடந்தும் விசாரனை தொடர்ந்தது. நாளையும் விசாரனை தொடரலாம் என்கின்றனர் காவல் துறை வட்டாரத்தில்.


  

சார்ந்த செய்திகள்