![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/E65MHhI5RZpa6Vu3K_W8DR7nyvI9al7awJHwkh49SXM/1533347606/sites/default/files/2018-07/dmk_003.jpg)
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/A5rEMcOrdpWct4ZVWnN1184YCjXZXE1tOlOT-il3zAg/1533347606/sites/default/files/2018-07/dmk_002.jpg)
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/IyNjqx84T7X8QMGSvr_b_SHibM1w5VC2hpBPzhzJTS8/1533347606/sites/default/files/2018-07/dmk_011.jpg)
அதிமுகவுக்கு ஓட்டு போட்டு மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் கடுமையாக சாடினார்.
தமிழகத்தில் சொத்து வரி 100 சதவீத உயர்வை கண்டித்து சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். திமுக முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
அதனைத் தொடர்ந்து எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவுக்கு ஓட்டு போட்டு மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். தமிழக அரசு மக்களை மனிதனாக மதிக்காமல் மிருகமாக பார்க்கிறது, சிதம்பரம் நகராட்சியால் தொடர்ந்து சாக்கடை தண்ணீர் கொடுக்கப்படுகிறது. சிதம்பரம் நகரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை இடித்தற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். வீடு இழந்த மக்களுக்கு மாற்று இடம் போர்க்களத்தில் அடிப்படையில் அமைத்து தர வேண்டும். தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்எல்ஏ சரவணன், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஜெம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.