Skip to main content

“தேர்தல் சரியாக நடந்திருந்தால் திமுகதான் வெற்றிபெற்றிருக்கும்”- மு.க. ஸ்டாலின் ...

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

அமமுகவில் இருந்து விலகி அண்மையில் தி.மு.கவில் இணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியின் தம்பியுமான பரணி கார்த்திக் தலைமையில் ஆயிரம் பேர் பேர் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவில் இணைந்துள்ளார்கள்.
 

mk stalin

 

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், “விரைவில் உள்ளாட்சி தேர்தல் என்பது "வரும் ஆனால் வராது" என்ற திரைப்பட வசனம் போல் இருந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நடப்பது அதிமுக ஆட்சி அல், பாஜக ஆட்சி. திமுக என்பது ஜனநாயக கட்டமைப்பு கொண்ட கட்சி. பிற கட்சிகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை, ஆனால் திமுகவில் அந்த நிலை இல்லை.  

2016 ல் அதிமுக கலவரத்தை உண்டாக்கியே வெற்றிபெற்றது. அப்போது தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே அதிமுகவிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துவிட்டார், பிறகு அதிகாரிகள் என்ன செய்வார்கள். சூழ்ச்சி மூலமாகத்தான் அதிமுக வெற்றி பெற்றது. முறையாக தேர்தல் நடந்திருந்தால் இந்த நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும். ராதாபுரத்தில் நாம்தான் வெற்றி பெற்றோம் என்ற செய்தியும் வரப்போகிறது; இன்பதுரை இப்போது துன்பதுரையாக மாறியுள்ளார். நீதிமன்ற மற்றும் இடைத்தேர்தல் தீர்ப்பிற்கு பிறகு நாங்குநேரி, விக்கிரவாண்டி, ராதாபுரம் என 3 சட்டமன்ற உறுப்பினர்களை திமுக கூட்டணி பெறும்” என்று கூறியுள்ளார். 

மேலும் பேசுகையில், “மணிரத்னம் உள்பட 49 பேர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு கொடுமையானது. வழக்கை திரும்ப பெற வேண்டும். இனி யாரும் எனக்கு சால்வை, பூங்கொத்து அளிக்க வேண்டாம், புத்தகங்களை வழங்குங்கள்” என்று தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ள பிரபலங்களுக்கு ஆதராவாக பேசியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்