Skip to main content

ஆயிரம் ஆயிரம் மாணவர்கள்...! டன் கணக்கில் மலர்கள்..! சீன அதிபருக்கு பிரமாண்ட வரவேற்பு.(படங்கள்)

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

 

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இந்தியா வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், 11 மற்றும் 12-ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் வைத்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தவுள்ளார்.  சீன அதிபரை வரவேற்க மாமல்லபுரம் முழுவதும் பல்வேறு வகைகளில் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்தில் நிகழவிருக்கும் இந்த வரலாற்று நிகழ்வை பலரும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள எவர்வின் பள்ளி மாணவர்கள் சீன அதிபரை வரவேற்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் போது 22,000 சதுர அடி பரப்புள்ள மைதானத்தில் 2000 மாணவர்கள் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பெயரை சீன எழுத்துகளின் வடிவத்தில் அமைத்தனர். அந்த மாணவர்கள் அனைவரும் ஜீ ஜின்பிங் முகமூடி அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 1.5 டன் சாமந்திப்பூக்களைக் கோண்டு ஹார்டி வெல்கம் (HEARTY WELCOME)என்று எழுதியிருந்தனர். அப்போது மைதானத்தை சுற்றி 1500 மாணவர்கள் இந்திய மற்றும் சீன கொடிகளை அசைத்தவாறு நின்றனர். சுமார் 50 மாணவர்கள் தங்கள் முகத்தில் சீன மற்றும் இந்திய கொடிகளை வரைந்திருந்தனர். 
 

சார்ந்த செய்திகள்