Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கர் – திருநாவுக்கரசர் சந்திப்பு!!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பார்வையிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள் முதல் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் முகாமிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

 

MEET

 

அமைச்சர் விஜயபாஸ்கர் 16 ந் தேதி முதல் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்துள்ள பகுதிகளை பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். செவ்வாய் கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் நிவாரணம் வழங்கிய மாநில தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை பெரியார் நகரில் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். 

 

இன்று காலை அந்த பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் திருநாவுக்கரசர் அந்தப் பகுதியில் இருப்பதை அறிந்து அந்த வீட்டிற்கு சென்று திரநாவுக்கரசரை சந்திதார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் துரிதமாக நடந்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் திருநாவுக்கரசரிடம் விளக்கிறனார். மேலும் தென்னை, பலா, முந்திரி போன்ற மரங்கள் அதிகமாக சேதமடைந்துள்ளது அவற்றிற்கு தேவையான நிவாரணம் பெற்றும் தர அனைத்து பணிகளும் நடந்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் திருநாவுக்கரசரிடம் கூறினார். அப்போது திருநாவுக்கரசர்.. தென்னை மரங்களுக்கும், பலா, போன்ற அனைத்து மரங்களுக்கும் தற்போது அறிவித்துள்ள நிவாரணம் விவசாயிகளுக்கு பத்தாது. விவசாயிகளின் கடன்களை அடைக்கவும் முடியாது. அதனால் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க பாதிப்புகளை நேரில் பார்த்து வரும் நீங்கள் முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றார். அதற்கு நிச்சயமாக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நிவாரணம் பெற்றுத் தர அனைத்து முயற்சிகளும் நடக்கிறது. முழுமையான பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகளும் வேகமாக நடக்கிறது என்றார்.

 

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு அப்பகுதியிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்