தஞ்சையில் செய்தியாளர்கைளை சந்தித்த அ.ம.மு.க துணைபொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலைஞர் நினைவஞ்சலி விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்ளவில்லை என்ற காரணத்தினாலேயே நாடுமுழுவது உள்ள காவி மையத்தை அகற்ற வேண்டும் என ஸ்டாலின் முழங்கியுள்ளார் எனக்கூறியுள்ளார்.
மேலும் அதிமுகவில் தற்போது நகைச்சுவை நடிகர்கள் அதிகமாகி விட்டனர் குறிப்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வதை முதல்வராக அறிவித்தபின் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என ஆர்.பி.உதயகுமார்தான் அம்மாவின் நினைவில்லத்தில் மொட்டையடித்துக்கொண்டு சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் தீர்மானம் ஏற்றினார். ஆனால் அப்படியெல்லாம் தீர்மானம் போடக்கூடாது என சசிகலா கண்டித்தார். இப்போது பார்க்கையில் இவர்கள் எல்லாம் எப்படி என்றால் சினிமாவில்தான் நடிகர்களை பார்த்திருப்போம் ஆனால் இவர்களெல்லாம் நிஜவாழ்விலேயே நடிக்கும் நடிகர்கள் அதுவும் காமெடி நடிகர்கள் இவர்களை போன்ற காமெடி நடிகரை எங்கும் பார்க்கமுடியாது எனக்கூறினார்.