கூடன்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிகளவு மீனவர்கள் தினமும் அந்த போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டு மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக இடிந்தகரை போராட்டக்களத்தில் இரவு பகலாக போராடினார்கள். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை அறிந்து அதிர்ச்சியடைந்த இடிந்தகரை பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஸ்டெர்லைட் சம்பத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இடிந்தகரை கிருஸ்தவ ஆலத்தில் இருந்து ஊர்வலமாக கூடன்குளம் அணுஉலை எதிரே நோக்கி வந்தனர். அப்போது இடிந்தகரையில் வெளிப்பகுதியில் இருந்த மதுக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இந்த சம்பவத்தையடுத்து இடிந்தகரை பகுதியில் விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களை தடுத்து திருப்பி அனுப்பினார்கள்.
கூடன்குளம் அணுஉலைக்கும் எதிராக அந்த பகுதி மக்கள் முற்றுகையிடுவார்கள் என்ற நிலைமை ஏற்படும் என்பதால் அணுஉலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.