Published on 21/02/2019 | Edited on 21/02/2019
![JAYAKUMAR](http://image.nakkheeran.in/cdn/farfuture/cMN9Rel1f4yHYoIVEcxMoxAx-_QneX3PK2UZdAbwfno/1550758834/sites/default/files/inline-images/Z6.jpg)
சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
தேர்தல் பணிகளில் அதிமுக ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கொதிக்கும் சூரியன், துண்டிக்கப்பட்ட கை, கூர்மையான பம்பரம், சுத்தி அரிவாள் என திமுக கூட்டணி கலவர கூட்டணியாக உள்ளது. அதிமுக கூட்டணியோ இலை, பூ, பழம் என இயற்கையான மங்காளகரமான கூட்டணியாக உள்ளது. காங்கிரசுக்கு 10 தொகுதி திமுக கொடுத்திருப்பது திமுகவின் பலவீனத்தை காட்டுகிறது என்றார்.