Skip to main content

இது புதையல்.. வெளியே விற்க முடியாது; வியாபாரிகளை ஏமாற்றிய வட மாநிலத்தவர்கள்!

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

mayiladuthurai fake gold issue two persons arrested by police 

 

குண்டுமணி மாலைகளைத் தங்கம் எனக்கூறி வணிகர்களிடம் நூதன முறையில் விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வடமாநிலத்தைச் சேர்ந்த தேவூ (வயது 28), ராஜிவ் (வயது 48) ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் சில காலம் தங்கியிருந்து பணி செய்து வந்த நிலையில்., தற்போது மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள கடைகளில் இவர்கள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்றதாக வணிகர்கள் இருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதனிடையே, தேவூ (28) , ராஜிவ் (48) ஆகிய இருவரும் தங்களுக்குப் புதையல் கிடைத்துள்ளதாக வணிகர்களிடம் கூறி பெரிய அளவிலான குண்டுமணி மாலைகளைக் காண்பித்துள்ளனர்.

 

மேலும் "இந்த தங்க குண்டுமணி மாலைகளை வெளியில் விற்பனை செய்தால் மாட்டிக் கொள்வோம். தங்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ செலவிற்கு உடனடியாக பணம் தேவைப்படுவதால் விற்பனை செய்வதாகவும்" வணிகர்களிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து குண்டுமணி மாலைகளிலிருந்து 1 கிராம் மதிப்புள்ள இரண்டு குண்டு மணிகளை மட்டும் வணிகர்களிடம் கொடுத்து முழுவதும் தங்கத்தால் ஆன குண்டுமணி மாலைகள் என நம்ப வைத்துள்ளனர். இதனை நம்பி ஒருவர் 5 லட்சம் ரூபாய் பணமும், மற்றொருவர் ஒரு லட்சம் ரூபாய் பணமும் கொடுத்து குண்டுமணி மாலைகளை வாங்கியுள்ளனர். வாங்கிய பின்பு குண்டுமணி மாலைகளை வணிகர்கள் சோதித்தபோது அவை போலியானவை எனத் தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வணிகர்கள் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இன்று ரயில் மூலம் வெளியூருக்குத் தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளிகள் தேவூ, ராஜிவ் ஆகியோரை மயிலாடுதுறை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலியான குண்டுமணி மாலைகளைத் தங்கம் எனக்கூறி வணிகர்களை நம்ப வைத்து வடமாநிலத்தவர்கள் ஏமாற்றிய இந்த நூதன மோசடி சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.