தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் மசாஜ் சென்டர் பிஸ்னஸ் கொடிக்கட்டி பறக்கிறது. 50க்கும் மேற்பட்ட சென்டர்கள் இருக்கின்றன. இதில் மாசஜ் சென்டர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையும் நடந்து கொண்டுயிருக்கிறது.
சென்னை பெரம்பூர் மரியம் தெருவை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் திருச்சி பொன்னகர் காந்திநகர் 3வது தெரு ஆயுர்வேத மசாஜ் சென்டர் வைத்துள்ளார். அங்கு 35 வயது உள்ள ஒரு வாலிபர் வந்துள்ளார். ''மசாஜ் செய்ய வேண்டும் அழகிகள் இருக்கிறார்களா? மசாஜ் செய்ய எவ்வளவு ரேட்?'' என்று விசாரித்திருக்கிறார்.
மசாஜ் ரேட்டை கேட்டதும், ''மசாஜ் செய்யும் அழகிகளை முதலில் காட்டுங்கள்'' அதன் பிறகு பணத்தை பத்தி பேசலாம் என்று சொல்ல. இதனால் அங்கு வாக்குவாதமாகி அந்த இடமே பதட்டமானது. இந்த நிலையில் வந்தவர் தீடீர் என கத்தியை காட்டி முகமது முஸ்தபாவிடம் மிரட்டியுள்ளார். பயந்து போன அவர், ''பிரச்சனை பண்ணாதீங்க சார்'' என்று கெஞ்ச ஆரம்பிக்க, ''ஒழுங்க மரியாதையா இருக்கிற பணத்தை எடுத்து மேல வை'' என்று மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். பதறி பயந்து போனார் முகமது முஸ்தபா. இவருடைய பயத்தை பயன்படுத்தி மிரட்டி 48,500 ரூபாய் பறித்துக்கொண்டு சென்று விட்டார். இது குறித்து உடனே நீதிமன்ற காவல்நிலையத்தில் முகமது முஸ்தபா புகார் செய்தார்.
அந்த பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் புகுந்து பணம் பறித்தது சாராய பாண்டி என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை தேடி வருகிறார்கள்.
திருச்சியில் நிறைய இடங்களில் மசாஜ் சென்டர்கள் இருக்கின்றன். இந்த சென்டர்களில் சாரய பாண்டி போன்று பல ரவுடிகள் மசாஜ் சென்டர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையிருக்கிறார்கள். தற்போது தெருவில் வைத்துள்ள சிசிடி வீடியோவில் சிக்கியிருக்கிறார் பிரபல ரவுடி சாராயபாண்டி!