Skip to main content

ஆணவப் படுகொலைக்கு எதிராக தனி சட்டம் வேண்டும்- வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
 Lawyers need a federation

 

ஆணவ படுகொலைகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

முன்பகை, உள்ளிட்ட வேறுபல காரணங்களால் நடக்கும் கொலைகளைவிட ஆணவ படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் நடந்த உடுமலைப்பேட்டை சங்கரின் படுகொலை ஒட்டுமொத்த சமுக ஆர்வலர்களின் மனதையும் கலங்கடித்தது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் சமுகத்தைச் சேர்ந்த இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015 ல் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பிறகு சங்கரும் கௌசல்யாவும் சங்கரின் வீடான உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலத்தில் வசித்துவந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கௌசல்யாவும் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சுற்றிவலைத்து இருவரையும் கத்தி, அரிவால் உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு வெட்டினார்கள்.

 

இதில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து போனார். தலையில் பலத்த காயமடைந்த கவுசல்யா குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை அங்கு புழக்கத்தில் இருந்த ஒட்டுமொத்த மக்களும் பார்த்து குலைநடுங்கி போனார்கள். அதோடு அங்கு உள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியிருந்ததை ஒட்டுமொத்த நாடும் தொலைக்காட்சி சமுக வலைத்தளங்கள்மூலம் பார்த்து அதிர்ந்தனர்.

 

 Lawyers need a federation


அந்த கொலை வழக்கில் கௌசல்யாவின் பெற்றோர் சின்னசாமி, அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது . கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய்  அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கானது திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு  12.12 .2017 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 

அந்த தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார் கலை தமிழ்வாணன் ,மதன் என்ற மைக்கேல் ஆகிய ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, கௌசல்யாவின் தாய்  தனலட்சுமி, அவருடைய தாய் மாமன் பாண்டித்துரை, கல்லூரி மாணவனாக இருந்த பிரசன்னா ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். மற்றொரு குற்றவாளியான ஸ்டீபன்ராஜ் ஆயுள் தண்டனையும் மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. அதேபோல கௌசல்யாவின் தாய்  தனலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது .

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அமர்வு இந்த வழக்குக்கான தீர்ப்பை  ஜீன் 22 ம் தேதி வழங்கியது. அந்த தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமியின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். மேலும் ஐந்து குற்றவாளிகளின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தன்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டது. மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு கால சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டது. கௌசல்யாவின் தாய்  தனலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டது செல்லும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

 

தமிழக அரசு இந்த தீர்ப்பின் மேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சொல்லியுள்ளனர்.

 

இந்தநிலையில் தான் ஆணவப் படுகொலை வழக்கில் சம்மந்தபட்டவர்கள் எளிமையாக விடுதலையாகிவிடுகின்றனர். அதற்காக தனி சட்டம்வேண்டும் என்கிற கோரிக்கை பலதரப்பிலும் எழுந்தபடியே இருக்கும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் ஆனவகொலைக்கு தனி சட்டம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறது. வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம. சேயோன் கூறுகையில்.

 

 Lawyers need a federation


"உடுமலைபேட்டை சங்கர் என்கிற இளைஞரின் ஆணவ படுகொலை ஒட்டுமொத்த மனித சமுகத்தையும் திரும்பிபார்க்கவைத்தது. பட்டபகலில் மக்கள் அதிகம் புழக்கம் உள்ள இடத்தில் நடந்த ஆணவப் படுகொலை செய்யப்பட்ட  மேல்முறையீட்டு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது. முக்கிய குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த தீர்ப்பை ஆராயும்போது  உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அதற்கு சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டுமெனவும் கடந்த 2018 லேயே உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தடுக்கும் நடவடிக்கைகள் என்ற மூன்று தலைப்பில் வழிகாட்டும் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது .

 

அந்த தடுப்பு நடவடிக்கைகளில்  குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை மாநில அரசுகள் கண்டறிந்து அந்த பகுதியின் காவல் அதிகாரிகளுக்கு அதுபற்றி விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும். அது போல நிவாரண நடவடிக்கைகளாக அச்சுறுத்தலுக்கு ஆளாகும் தம்பதியினர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லங்களை தொடங்க வேண்டும். கலப்பு திருமணங்கள் செய்து கொள்ள விரும்புவோர் திருமணம் நடைபெறுவதற்கு பாதுகாப்பை காவல்துறை தரவேண்டும் என்றும், தண்டனை நடவடிக்கைகளாக இந்த வழிகாட்டும்  நெறிமுறைகளை காவல்துறையை சேர்ந்தவர்கள் மாவட்ட அதிகாரிகளும் பின்பற்றத் தவறினால் அவர்கள் மீது துறை ரீதியான தண்டனை எடுக்கப்பட்டு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. நடைமுறைப்படுத்தப்படவில்லை .

 

மேலும் இந்திய சட்ட ஆணையம் தயாரித்த ஆணவ கொலைகள் தொடர்பான சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. உச்சநீதிமன்றம்  வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய , மாநில அரசுகள் உடனே பின்பற்ற வேண்டும். மேலும் மத்திய அரசு உடனடியாக ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். அதில் ஈடுபடும் நபர்கள் மீது அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க வேண்டும். மேலும் தமிழக அரசு உடனடியாக உடுமலை சங்கர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டுமென்றால் கடுமையான சட்டங்கள் தேவை," என்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.