இந்தியா முழுக்க இன்று முதல் மூன்று புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டங்களுக்கு வக்கீல் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரியும், பெயர் மாற்றக் கோரியும் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) சார்பில் இன்று முதல் வரும் 8-ந் தேதி வரை கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் கோட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பெருந்துறை கொடுமுடி அந்தியூர் பவானி உள் படம் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் வக்கீல்கள் இன்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 1300க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) அந்தந்த நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.