மதுரையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிட நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவிற்கு நிலங்களை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் சொக்கத்தேவன்பட்டி கிராமத்தில் வசிக்கும் 60 பயனாளிகளுக்கு கடந்த 2000 வது ஆண்டு தலா 3 சென்ட் அளவிற்கு இலவச நிலம் வழங்குவதற்கான வீட்டுமனை பட்டா ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டது. இதற்காக சொக்கத்தேவன்பட்டியில் ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வீட்டு மனை பட்டா வழங்கி 22 ஆண்டுகளாகியும் நிலத்தை அதிகாரிகள் ஒதுக்கீடு செய்ய மறுத்து வருவதாக பட்டாக்களை பெற்ற பயனாளிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது தொடர்பாக பயனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வீட்டு மனை பட்டாவுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.