Skip to main content

23 கி.மீ. வேகத்தில் கஜா புயல்!!!

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

 

இன்று காலை புயலின் வேகம் 14 கி.மீ. ஆக இருந்தது. இது தற்போது மணிக்கு 23 கி.மீ. என்ற வேகத்தில் நாகையை நோக்கி நகர்கிறது. புயலின் தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 338 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 328 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்ற வேளையில், சென்னை எழிலகத்திலுள்ள  மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் புதிய அமைப்பை தொடங்கிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், கஜா புயல் நம்மை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருக்கிறது, தயாராக இருக்கவேண்டும் என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்