பெண் பத்திரிகையாளர்களை கொச்சையாகவும், தரக்குறைவாகவும் பேசிய நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டங்கள் நடத்தியதோடு பல்வேறு காவல் நிலையங்களில் எஸ்.வி.சேகர் மீது புகாரும் கொடுத்தனர்.
இந்தநிலையில் அந்த புகார் மனுக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு எஸ்.வி.சேகரின் உறவினரான தமிழக தலைமை செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் முட்டுக்கட்டை போட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்தநிலையில் தலைமை செயலாளா் கிரிஜா வைத்தியநாதனை கண்டித்தும், காவல்துறை உடனடியாக எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்ட அனைத்து பெண்கள் அமைப்பு சார்பில் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் தி.மு.க. முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடந்தது.
அப்போது பேசிய ஹெலன் டேவிட்சன்... பெண் பத்திரிகையாளா்களை வாய் கூசும் ரீதியாக கொச்சையாக பேசிய எஸ்.வி.சேகரை கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க தலைமை செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து இருப்பது பேசுவதற்கே வெட்கமாக உள்ளது. தலைமை செயலாளரும் தான் ஓரு பெண் என்பதை மறந்து விட்டாரா? என காட்டமாக பேசினார்.
இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் உள்ளிட்ட பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
Published on 26/04/2018 | Edited on 26/04/2018