தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், சின்னமனூர், பாளையம், கூடலூர் போன்ற பகுதிகளில் தேனி மாவட்ட காவல் துறையை கண்டிக்கிறோம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஆயுதபடை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் படங்களை போட்டு தென்னிந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாணவ அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
இப்படி திடீரென எஸ்பியை கண்டித்து அவதூறு போஸ்டர் அடிப்பதற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எஸ்.பி. இங்கு வந்ததிலிருந்தே தனது சாதிகாரங்களுக்கு முக்கியதும் கொடுத்து கேட்கும் ஸ்டேஷன்களுக்கு டிரான்ஸர் போட்டு கொடுக்கிறரர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வந்தது.
இந்த நிலையில்தான் ஆயுத படையில் இருக்கும் ஆய்வாளர் சீனியும், எஸ்.பி. இருக்கும் தைரியத்தில் தனக்கு கிழ் உள்ள காவலர்களை சாதி ரீதியாகவும் ஓரங்கட்டி வந்தரர். இதை எஸ்பியும் கண்டுகொள்ளவில்லை. அதனுடைய அதிருப்தியில்தான் இப்படி ஒரு கண்டன போஸ்டரை ஒரு சமூகத்தை மாணவ அமைப்பினர் ஒட்டி இருக்கிறார்கள்.
இதனால் டென்ஷன் அடைந்த காக்கிகள் அந்த அவதூறு போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுரேஷ், மகேஸ்வரன், சம்சுதீன் ஆகியோர் தான் எஸ்.பி.யை பற்றி இப்படி ஒரு அவதூறு போஸ்டர் ஒட்டினார்கள் என்று தெரிந்ததின்பேரில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இப்படி கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் பாளையம் சார்பு நீதிபதியான அருள் இளங்கோ முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆனால் நீதிபதியோ உடன் வந்த போலீசாரை பார்த்து, நீதிபதிகளை கண்டித்து போஸ்டர் ஒட்டி இருந்தால் கண்டுக்க மாட்டீங்க, உங்களை பற்றி ஒட்டினால் உடனே கைது பண்ணி உள்ளே போட சொல்லுகிறீர்கள். இது என்ன நியாயம் என போலீசாரை எச்சரித்து விட்டு அந்த மூன்று பேரையும் நீதிபதி சொந்த ஜாமினில் விடுதலை செய்தார். இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சக்தி