கடந்த 7 நாட்களாக நடந்து வந்த ஆசிரியர்கள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அரசின் மிரட்டலையடுத்து இன்று சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனா்.
இந்த நிலையில் பணிக்கு திரும்பிய ஆசிரியர்களிடம் நாம் பேசியபோது, 2003-ல் ஜெயலலிதாவுக்கே பயப்படாத இந்த ஆசிரியர்கள் கூட்டமைப்பு எடப்பாடியை கண்டா பயப்பட போறோம். அது ஓரு போதும் நடக்காது தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தில் நாங்கள் பணிக்கு செல்லவில்லை. மாணவா்களின் நலன் கருதி தான் பணிக்கு சென்று இருக்கிறோம். அதனால் எங்கள் போராட்டம் முடிவக்கு வந்ததாக இந்த அரசு கனவு காண வேண்டாம்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களின் போராட்டம் தொடரும். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பட்சத்தில் 10வது கோரிக்கையாக அந்த தற்காலிக ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைப்போம்.
அதிகாரத்தை வைத்து கொண்டு உள்ளாட்சி தோ்தலை கூட சந்திக்க பயப்படுறது இந்த அரசு. அதே போல் தான் எங்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை கூட சந்திக்க பயப்படுகிறது என்றனா்.