Skip to main content

''கலைஞர் ஒரு முழு கதை வசனகர்த்தா ஆகியது சேலத்தில்தான்''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

"It is in Salem that the kalaingar becomes a complete storywriter" - Principal M.K.Stalin

 

சேலம் வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து சேலம் நகர பேருந்து நிலையத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் தற்போது திறந்து வைத்தார் .

 

தொடர்ந்து சேலம் கருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்திற்கு 2,352 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு மேடையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ''நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி நம்முடைய கலைஞர். அவருடைய நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தொடங்கக்கூடிய இந்த நேரத்தில் சேலம் மாநகரில் அவருடைய திருவுருவச் சிலையை நான் திறந்து வைத்துவிட்டு ஒரு மனநிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 27-8-2019 அன்று திமுக சார்பில் திமுக சார்பில் கலைஞரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. இப்பொழுது மாநகராட்சி சார்பில் பேருந்து அண்ணா பெயரில் உள்ள பூங்காவில் கலைஞரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் பூங்காவில் பூத்த மனம் தரும் மலர் தான் கலைஞர்.

 

சேலத்திற்கும் கலைஞருக்குமான நட்பு என்பது அன்பான நட்பு. ஒரு குடும்ப நட்பு. கலைஞர் ஒரு முழு கதை வசனகர்த்தாவாகியது இந்த சேலத்தில்தான். இன்றைக்கும் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு கம்பீரமாக காட்சியளிக்கிறது. அந்த மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் தான் கலைஞரை சேலத்திற்கு அழைத்தார். அப்பொழுது கலைஞருக்கு 500 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். இங்கே பணியாற்ற வருவதன் காரணமாக எனது இயக்கப் பணிகள், கழக பணிகளுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்று நிபந்தனை வைத்து, அப்படி எதுவும் இருக்காது என்று சுந்தரம் சொன்ன பிறகுதான் கலைஞர் சேலத்தில் தங்கி பணியாற்ற ஒப்புக்கொண்டார். அப்படி பணியாற்ற துவங்கிய நேரத்தில் வெளிவந்த படம் தான் 'மந்திரி குமாரி'.

 

 

கலைஞர் சேலத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில்தான் 1949 ஆம் ஆண்டு திமுகவே உருவானது. திமுகவின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது சேலத்தில் இருந்துதான் கலைஞர் சென்னைக்கு சென்றார். அதுதான் வரலாறு. அந்த அளவிற்கு கலைஞருக்கு அவருடைய வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஊர்தான் இந்த சேலம். அவருடைய நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் சிலை நிறுவப்படுவது மிக மிக பொருத்தமான ஒன்று. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது சேலத்திற்கு மறைந்த வீரபாண்டியார் அவர்களால் சேலத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும். சேலத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நேரு அவருடைய சொந்த மாவட்டமான திருச்சியை விட சேலத்திற்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்து மற்ற துறைகள் மூலமாக பல்வேறு நல திட்டங்களை இரண்டு ஆண்டு காலமாக செயல்படுத்தி வருகிறார்''என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்