தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீரென கடல் உள்வாங்கியது அந்த பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றலா பயணிகளும் கடல் உள்வாங்கியதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக ராமநாதபுரத்தில் கடல் உள்வாங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வடக்கு பாக் ஜலசந்தி பகுதியில் அதிகாலை முதல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் புனித நீராட வருகை தரும் நிலையில் கடற்பாறைகள் வெளியே தெரியும் அளவிற்கு கடல் உள்வாங்கியதால் நீராட முடியாமல் தவித்தனர். அதேபோல் படகுகளும் கடல் உள்வாங்கியதால் தரைதட்டி நின்றன.