தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று (09.01.2023) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இந்திய குடிமைப்பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 பேருடன் தமிழக ஆளுநர் கலந்துரையாடல் நிகழ்த்தினார். இந்த கலந்துரையாடலில் கேள்விகளுக்கு அவசரமாக பதில் அளிக்க வேண்டாம் நிதானமாகப் பதிலளியுங்கள் என அறிவுறுத்திய ஆளுநர், குடிமைப் பணிகளுக்கு தேர்வாகுபவர்களுக்கு பர்சனாலிட்டி மிக முக்கியம் என்றதோடு, சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திப் பேசினார்.