Skip to main content

ஆயுத பூஜை படைக்க சென்ற நேரத்தில் வீட்டில் 40 பவுன் கொள்ளை!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020
incident in chithamparam

 

சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன். விவசாயியான இவர் சிதம்பரம் - கடலூர் புறவழி சாலையில் மண்டபம் என்ற இடத்தில்  மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஆயுத பூஜை என்பதால் மாலை 5 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடைக்குச் சென்று ஆயுத பூஜைக்கு படைத்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டில் இருந்த 40 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனைத்  தொடர்ந்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த அவர்கள் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்