Skip to main content

சக்கப்போடு போடும் கள்ளச்சாராயம். – கண்டுகொள்ளப்படாத புகார்கள்...

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார் குப்பம், மோட்டூர், சின்னபள்ளிகுப்பம், மேல் சான்றோர் குப்பம், ஆகிய கிராமங்களில் சில வீடுகளிலும், வயல் வெளியிலும் 24 மணி நேரமும் வெளிப்படையாக சாராயம் விற்கிறார்கள் என காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்களும், இளைஞர்களும்.

 

illicit liquor sales near vaniyambadi

 

 

ஆனால், இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், உமராபாத் காவல்நிலைய எல்லைக்குள் வரும் இந்த கிராமங்களில் வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் பகலிலேயே குடித்துவிட்டு ரகளை செய்வது வாடிக்கையாக உள்ளதாம்.

உமராபாத் காவல்நிலையத்துக்கு தகவல் சொன்னால், வித்துப்போறான், உனக்கென்ன வந்துச்சி, போ என தகவல் சொல்பவர்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் வீடுகளில், வயல் வெளியில் வைத்து விற்பனை செய்வதை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வளைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.

இது உயரதிகாரிகள் வரை பார்த்து உமராபாத் காவல்நிலைய காவலர்களிடம் விசாரணை நடத்த அவர்கள், அதெல்லாம் பொய் சார் என சமாளித்துள்ளனர். அதனை நம்பாமல், உடனயடியாக அவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடையுங்கள் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு அறிவுறுத்த தற்போது, வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து சாராயம் விற்பவர்களை தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்