
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சனை குறித்து தலைமைச் செயலகத்தில் விஷாலுக்கு எதிரான அணியினர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் ராஜன்,
அப்போது அவர், முதலமைச்சர் எங்கள் மனு குறித்து பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார். அரசு என்ன செய்யும் என்று எங்களுக்கு தெரியாது. அனால் அரசு என்ன செய்ய வேண்டும் என்ற மனு கொடுத்திருக்கிறோம்.
நாங்கள் கேட்டது நியாயமான விஷயம். ஒரு சங்கத்தை படுகுழியில் தள்ளிவிட்டார் விஷால். அற்புதமாக இருந்த சங்கத்தை மிக கேவலம்க நடத்திவிட்டார். 150 பேரை நீக்கியிருக்கிறார். ஹிட்லர் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் விஷால். எங்கள் படங்களை திருட்டி விசிடியாக விடுகின்ற தமிழ் ராக்கர்ஸ்ஸோடு சேர்ந்து கொண்டு, லைக்காவோடு சேர்ந்துகொண்டு 33 கோடி ரூபாய் வாங்கி இரும்புத்திரை படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். தயாரிப்பாளர்களை அழிக்கிறவர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறார். அவர் இனி சங்க பொறுப்பில் இருக்கக்கூடாது. விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும். நல்ல நிர்வாகம் வேண்டும். அதுதான் நாங்கள் வேண்டுவது. இவ்வாறு கூறினார்.