
குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட இராசராசன், உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் சென்னைக்கு வருகின்றன. இதைத் தமிழ் ஆர்வலர்கள் உற்சாகமாக வரவேற்க இருக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சை பெரிய கோயிலில் திருடப்பட்ட இராசராச சோழன், உலகமாதேவி சிலைகளை மீட்க வேண்டும் என தஞ்சாவூர் தமிழ்ப் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துப் போராடிவந்தன. இதன் மதிப்பு ஏறத்தாழ 150 கோடிகளாகும்.
இந்த நிலையில் அந்த சிலைகள் குஜராத் அருங்காட்சியம் ஒன்றிலிருந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் டீமால்மீட்கப் பட்டிருக்கிறது. மீட்கப்பட்ட சிலைகள் இன்று மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்கின்றன. இதனை தமிழறிஞர்களும் தமிழ் அன்பர்களும் வரவேற்கின்றனர்.
இதில், வரலாற்று நூலாசிரியரும் கல்வெட்டு ஆய்வாளருமான முனைவர் மு.இராசேந்திரன் இஆப., தஞ்சை பேராசிரியர் முனைவர் பா.இறையரசன், பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை திரு.சிவபாத சேகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.