Skip to main content

இழப்பீடு கோரிய பெண்ணுக்கு உதவி - ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவிக்க வந்த இளம்பெண்!  

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

Help for the woman who demanded compensation - the young woman who came to thank Stalin in person

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (31 ஜன.) சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''ஆரணியில் இழப்பீடு கோரிய பெண்ணுக்கு உதவித்தொகை கிடைக்க திமுக நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதிமுக ஐடி பிரிவு, திமுகவை குற்றம்சாட்டி தவறான தகவலை அளித்துள்ளது. பெண்ணுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை குறித்து நான் நிரூபிக்கத் தயார். நிரூபிக்காமல் போனால் மன்னிப்பு கேட்கிறேன். அதேபோல் அதிமுக ஐடி பிரிவு இதை நிரூபிக்கத் தவறினால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்'' எனப் பேசியிருந்தார்.

 

Help for the woman who demanded compensation - the young woman who came to thank Stalin in person

 

இந்நிலையில் ஆரணி தொகுதியில் கேஸ் வெடித்து நடந்த விபத்தில், வீடு இடிந்து தாயாரை இழந்த இளம்பெண், கடந்த 29-ம் தேதி ஸ்டாலின் பிராச்சரத்தில் தனக்கு நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை என புகார் அளித்திருந்தார். அவருக்கு மறுநாளே அரசு நிவாரணம் 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனால் இன்று (02.02.2021) ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

 

Help for the woman who demanded compensation - the young woman who came to thank Stalin in person

 

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த இளம்பெண், “என் பெயர் எழிலரசி. ஆரணியில் இருந்து வருகிறேன். இரண்டு மாசத்திற்கு முன்பு என் அம்மா பக்கத்து வீட்டில் நிகழ்ந்த சிலிண்டர் விபத்தில் இறந்துவிட்டார்கள். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட எங்கள் குடுப்பதிற்கு அரசின் நிதியுதவி கிடைக்காமல் இருந்தது. பலமுறை கலக்டெர், தாசில்தார்கிட்ட மனு கொடுத்தும், அந்த நிதியுதவி எங்களுக்குக் கிடைக்கவில்லை. கடந்த 29-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் ஊருக்கு மீட்டிங் வந்தாரு. அப்பொழுது அவரிடம் இது தொடர்பாக மனுகொடுத்தேன். அவர் இன்று அல்லது நாளை காலைக்குள் தீர்வு கிடைக்கும் எனக் கூறினார். அவர் கூறியது போலவே 2 லட்சம் ரூபாய் எனது வங்கிக்கணக்கில் ஏற்பட்டது. அதற்காக நன்றி தெரிவிக்க வந்தேன்'' எனக் கூறினார்.  

 

சார்ந்த செய்திகள்