Skip to main content

'நேர்மையான தேர்தல் நடத்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் உதவாது' - திமுக கடிதம்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'One country and one election program will not help to conduct honest elections'-DMK letter

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த பாஜக அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில் இதற்காக அண்மையில் உயர்மட்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கைவிடுமாறு திமுக, உயர்மட்டக் குழுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், 'ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களில் முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, ஒன்றிய மாநில உறவை மட்டும் இன்றி ஒன்றியத்திற்கு பாதகமான விளைவுகளை இத்திட்டம் ஏற்படுத்தும். அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக்குழு, அதிகார பசி கொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகாமல் விசாரணையை நிறுத்த வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு சட்டவிரோதமானது. அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. அதேநேரம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டம் கூறும் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் உதவாது' என திமுக தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

யுஜிசி நெட் தேர்வு ரத்து- மத்திய அரசு அறிவிப்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
UGC NET Exam Cancellation - Central Govt Notification

யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடைபெற்ற யுஜிசி நெட் 2024 தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என தேசிய சைபர் கிரைமில் இருந்து யூஜிசிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை; புனிதத்தை உறுதி செய்யும் நோக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் யுஜிசி நெட் 2004 தேர்வு நடைபெற்ற நிலையில் அரசு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ துறைக்கான  நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யூஜிசி நெட் 2024  தேர்வவை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“நீட் தேர்வில் பணம் கொடுப்பவர்களுக்கு ஆணையம் சாதகமாக இருக்கிறது” - செல்வப்பெருந்தகை

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Selvaperunthagai strongly oppose NEET exam

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இனியும் தேவையா நீட் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கி.வீரமணி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ், இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “அரியலூர் அனிதா மரணத்திற்குப் பின்னர் நீட் தேர்வு தேவையா எனத் தேசம் முழுவதும் கேள்வி எழுந்தது. ஜெயலலிதா இருந்தவரை அனுமதிக்காத நீட் தேர்வு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உள்ளே நுழைந்து. தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் ரத்து மசோதாவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இப்படி ஒரு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு இதுவரை அமைந்ததில்லை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது என ஒரு பரப்புரையைச் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தடுப்பணையில் நீட் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு சங்கல்ஃப் என்ற இயக்கம் மனுதாரராகப் போய் நிட்டை நடத்தலாம் என அனுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தார்கள். 

நீட் நடத்துவதில் ஆளுநரும், பிரதமரும் தீர்மானமாக உள்ளனர். நீட் என்பது பல கோடி வருமானம் தரக்கூடிய விஷயமாக மாறி உள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வது, ஆசிரியர்களே தேர்வு எழுதுவது, சட்டத்தில் இல்லாததை எல்லாம் மோடியின் அரசு நீட்டில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. நீட் வணிகமயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு பள்ளிகளிலும் நீட் பயிற்சி மையங்கள் அலுவலகத்தை திறக்கிறார்கள். பள்ளிகளில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்விற்கும் இலட்ச கணக்கில் பணத்தை கட்ட வேண்டும். கிராம புறமானவர்கள் எப்படி இதில் சேர முடியும்? ஏழை எளிய மாணவர்கள் இந்த தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவர்? இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது மாமனிதன் என்று சொல்லக்கூடிய மோடிக்கும், மத்திய அரசுக்கும் தெரியவில்லை. 

நீட் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த தற்கொலை விவாகரத்தில் பிரதமர், மத்திய அரசும் மௌனமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகள் தேர்வு எழுதச் சென்றால் ஆடையை கத்தரிப்பது, தாலி உள்ளிட்ட ஆபரணங்களைக் கழட்ட சொல்லும் ஆணையம், பணம் கொடுப்போருக்குச் சாதகமாக இருக்கிறது. தேசிய தேர்வு முகமையில் எப்படிப்பட்ட அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை வலது இடது புறங்களில் வைத்துக்கொண்டு நடக்கும் இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி இப்போதே நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வை மாநிலங்கள் எப்போது ஏற்றுக் கொள்கிறதோ அப்போது நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதுவரை நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர வேண்டும்” விடக்கூடாது" என்றார்.