Skip to main content

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலையில் விடிய விடிய மழை!

Published on 18/07/2021 | Edited on 18/07/2021

 

heavy rain in tamilnadu

 

தமிழகத்திற்கு அடுத்த ஐந்து நாட்கள் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பொழிந்தது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பொழிந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் பரவலாக கன மழை பொழிந்தது. விழுப்புரத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் புகுந்தது. பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்ததால் பேருந்துகள் பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Chance of rain in 9 districts

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இன்று (01.07.2024) இரவு 10 மணிக்குள் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு எனக் கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Chance of rain in 7 districts including Chennai

தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த சென்னை வானிலை மைய அறிவிப்பில், ‘இன்று முதல் ஏழு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவடங்களின் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, திண்டுக்கல், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.