Skip to main content

தொடங்கியது டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
The T-20 World Cup final has begun!

டி20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை சேர்த்தது. 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. 

இந்த நிலையில், இன்று (29-06-24) நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியோடு மோதும் இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த இறுதிப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், துபே, பாண்ட்யா, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் அக்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். 

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கிர்க்கெட் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.