கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் ஐயப்பன் இன்று விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இதுவரை நான் சென்றபோதெல்லாம் அந்த பங்களாவின் வாசலில்தான் எப்பவுமே நிற்பேனே தவிர உள்ளே போனது கிடையாது. அதுதான் லிமிட். அதற்குமேல் யாருமே போக முடியாது. நான் மட்டுமல்ல யாருமே போக முடியாது.
அதையும் மீறிப் போனால் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வரும். ஜெ. வீட்டில் 30 வருடம் வேலை செய்தேன். அவங்க மனசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். எங்க டூட்டிய மட்டும்தான் பார்ப்போம். ஓட்டுநர் கனகராஜ் அங்கிருந்து வெளியே வந்து அவராக ஏற்படுத்திக்கொண்ட தொடர்புதான். உள்ளே இருக்கும்வரை யாரும் எதுவும் பண்ண முடியாது. தெரிஞ்சா ரிப்போர்ட் போய்விடும். அதனால் அங்கு வேலை செய்த நாங்கள் யாரும் அரசியல் ஆளுங்க கூட வெச்சுக்கிறது இல்ல. கனகராஜ் சரியான வேலைகள் செய்வதில்லை; அவர் இஷ்டத்துக்கு இருப்பார்; இனிமேல் அவர் வேண்டாம்; நாம் சொல்கின்ற வேலையை கேட்டு இருந்தால் இருக்கட்டும் இல்லை என்றால் நாம் அனுப்பி வைத்துவிடலாம் என அனுப்பி வைத்து விட்டார்கள்'' என்றார்.