வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உள்ள வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்துக்கு சொந்தமான (கிங்ஸ்டன்) பொறியியல் கல்லூரியில் கடந்த 3ஆம் தேதி காலை 7.00 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை 2 நாளாக தொடர்ந்து நடத்தினர்.
இந்த நிலையில், காட்பாடியில் உள்ள கதிர் ஆன்ந்துக்கு சொந்தமான கல்லூரியில் நேற்று (07-01-25) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று மதியத்தில் இருந்து நடைபெற்ற சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. கல்லூரியில் உள்ள 2 அறைகளின் சீலைப் பிரித்து சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சோதனையின் போது சாப்ட்வேர் பழுதானதால் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பியுமான கதிர் ஆனந்த், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவுற்ற நிலையில், கதிர் ஆனந்திற்குக்கு சொந்தமான கல்லூரில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இரவு கல்லூரி லாக்கரில் இருந்து உரிய ஆவணம் இல்லாத ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் மூலம் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது.