Skip to main content

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகன் தற்கொலை! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

Groom passed away while engaged to be married!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சௌந்தரராஜன்(32). இவர், கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது பெற்றோர் செளந்தரராஜனுக்கு திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். அதற்காக பெண் பார்த்து இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அதன் படி, வரும் 25ம் தேதி செளந்தரராஜனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர் நண்பர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் வழங்கி வந்தனர். 


இந்த நிலையில், நேற்று முன்தினம் சௌந்தரராஜனின் சகோதரர் சிவகுமார் கோவையில் இருந்த செளந்தரராஜனுக்கு திருமண வேலைகள் தொடர்பாக செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளார். ஆனால், சௌந்தரராஜன் செல்போன் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளது. நீண்ட நேரம் முயற்சி செய்தும் சௌந்தர்ராஜனுடன் பேச முடியவில்லை. இதையடுத்து சிவக்குமார் கோவையில் உள்ள சௌந்தரராஜனின் நண்பர்கள் சிலரை தொடர்புகொண்டு, அவரது அறைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். 

 

அவரது நண்பர்கள் கோவை பீளமேடு டீச்சர்ஸ் காலனியில் செளந்தரராஜன் தங்கியிருந்த அறைக்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு செளந்தரராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது நண்பர்கள் இதுகுறித்து உடனடியாக சௌந்தர்ராஜனின் சகோதரர் மற்றும் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் சௌந்தரராஜன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 

அவரது அறையில் சௌந்தரராஜன் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். அதில், செளந்தரராஜன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில் பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு கடன் பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் வாழ பிடிக்கவில்லை அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது உடலை நல்லபடியாக அடக்கம் செய்யுங்கள். என் சுய விருப்பத்தின் பேரில் தற்கொலை செய்து கொள்கிறேன் என பதிவு செய்துவிட்டு தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.