Skip to main content

‘வண்டில என்ன கம்ப்ளைண்ட்?, வண்டியே கம்ப்ளைன்ட் தான்!’- அரசு பேருந்து ஓட்டுநரின் புலம்பல் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Govt bus driver video goes viral

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சர்வீஸ் சாலையில் வர வேண்டிய பேருந்து நெடுஞ்சாலையில் சென்றதால் ஆத்திரமடைந்த  பயணி இத்தனை நாளா பஸ் கீழே வந்துச்சு இப்ப ஏன் கீழ வரல வண்டில என்ன கம்பிளைன்ட்? என கேட்க வண்டியே கம்பளைண்ட் தான் என்று ஓட்டுநர் கூறும் விதம் வைரல் ஆகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி  சென்னை - பெங்களூர் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை  பகுதியில் மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள் செல்வதால், சர்வீஸ் சாலையில் பேருந்துகள் வந்து செல்லாமல் இருந்தது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சுமார் 40 அடி உயரம் மேலே ஏறி சென்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை இருந்தது. இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் சமீபத்தில் சர்வீஸ் சாலை அமைத்தது. தொடர்ந்து பல்வேறு அரசு பேருந்துகள் சர்வீஸ் சாலை வழியாக சென்று வந்தது.

Govt bus driver video goes viral

சர்வீஸ் சாலை வழியாக செல்லும்போது பேருந்து கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக தாமதமாக செல்லக்கூடிய நிலை இருப்பதால் ஓட்டுநர்கள் மேம்பாலத்தின் வழியாகவே பேருந்தை இயக்கி செல்கின்றனர். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் ஏரி வர சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஏறி பேருந்து கீழே வராமல் ஏன் மேலே செல்கிறீர்கள்? பேருந்தில் என்ன கம்பளைண்ட் என்று ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது ஓட்டுநர் செய்வதறியாமல் திகைத்து, “வண்டியே கம்ப்ளைன்ட் தான் என்கிட்ட கேட்டு என்ன பண்றது. நானே இதை வச்சு ஓட்டிட்டு இருக்கிறேன் போய் அதிகாரிகளை கேளுங்க...” என்று பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்