Skip to main content

   கஜா புயல் - தென் மாவட்ட நிலவரம்

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
n


நடு இரவு 12.30 முதல் அதிகாலை 06 மணி வரை நாகை-வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரை கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களை சேதப்படுத்தியிருக்கிறது எனினும் அதன் தாக்கம் தென் மாவட்டத்திலும் பிரதிபலிக்கிறது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் முழுவதும் அதிகாலை மூன்று மணி அளவில் தொடங்கிய மிதமான மழை விட்டுவிட்டுப் பொழிகிறது. 

 

தூத்துக்குடி மாவட்டத்தின் பள்ளி கல்லூரிகளுக்கு புயல் தாக்கத்தின் காரணமாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி விடுமுறை என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஏதேனும் மழை தாக்கமிருப்பின் அதை எதிர் கொள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் பேரிடர் மீட்பு குழுவும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தவிர கடலோர மாவட்டமான, தூத்துக்குடி தொடங்கி நெல்லை மாவட்டங்களில் குளிரைக் கிளப்புகிற சுருட்டை வாடைக் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. எனினும் புயலின் தாக்கம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் மழை இல்லாவிட்டாலும், குற்றால அருவிகளில் மிதமான அளவே தண்ணீர் கொட்டத் தொடங்கியிருக்கிறது.

 

நெல்லை மாவட்டத்திலுள்ள பெருமணல், கூட்டப்பனை, கூடுதாழை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம், பெரியதாழை பீச் ஹார்பர், உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீன் பிடித் தொழிலையே ஆதாரமாகக் கொண்ட நாட்டுப்படகுகள், மற்றும் விசைப்படடுகள் என நான் காயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடந்த நான்கு தினங்களாக கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டடுள்ளன என்கின்றன ஸோர்சுகளின் தகவல்கள்.

 

தூத்துக்குடியின் திரேஸ்புரப் பகுதிகளின் நாட்டுப் படகுகளின் சங்கத் தலைவரான ராபர்ட் வில்லவராயர் சொல்லுவது, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் புயல் எச்சிரிக்கை காரணமாக பல தடவை கடல் தொழிலுக்குச் செல்லமுடியாமல் மீனவ குடும்பங்கள் வருமானமின்றித் தவிக்கின்றார்கள் என்கிறார்.

 

தூத்துக்குடி துறைமுகத்தில் 8ம் எண் எச்சரிக்கைப் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்