Skip to main content

முத்த வீடியோவை வெளியிட்ட உளவுத்துறை! தலைமறைவாக எஸ்.எஸ்.ஐ!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

தமிழக அரசியலில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் எப்போது எல்லாம் கொந்தளிக்கிறார்களோ அப்போது எல்லாம் சர்ச்சையை கிளப்பும் வீடியோகள் தீடீர் என வைரல் வீடியோக்கள் வெளியாவது வழக்கம். 

 

ஆனால் திருச்சியில் ஒரு சிசிடிவி வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினரை அதிர வைத்திருக்கிறது. திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐயாக இருந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு வயது 54, இவர் கடந்த 12ம் தேதி ஸ்டேஷனில் இரவுப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் சசிகலா அவருக்கு வயது 34 என்பவருக்கு தீடீர் என தொடர் முத்தம் கொடுத்து திக்குமுக்காட வைத்தார். 

 

 Underground

 

அப்போது அங்கு தற்செயலாக வந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனிடம் சசிகலா இது குறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் சசிகலாவின் புகாரை எஸ்பிக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஸ்டேஷனில் முத்தம் பரிமாறிக் கொண்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்த விவகாரம் தொடர்பாக பாலகிருஷ்ணன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கேமரா பதிவுகள் வெளியாட்களுக்கு போனது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை வெளியிட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகளை வெளியிட்டது எஸ்பிசிஐடி ஏட்டு தான் என தகவல் வெளியாகியுள்ளது.

 

சம்பவத்தன்று எதிர்பாராதவிதமாக ஸ்டேஷனுக்குள் நுழைந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனால் அதிர்ச்சியடைந்த சசிகலா, எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் சென்ற பிறகு அழுது கொண்டே முத்தம் கொடுத்தது குறித்து புகார் கூறினார். அப்போது கேசவன் அவர் இருக்கும் போது சொல்லாமல் இப்போது சொல்கிறாய் என்று சொல்லி விட்டு காலை இது குறித்து பேசிக் கொள்ளலாம் என்று கூறி விட்டு சென்று விட்டார். 

 

அப்போது தான் சசிகலாவிற்கு கேசவனுக்கு விபரம் தெரியாமல் இருக்கும் போதே தேவையில்லாமல் உளறி விட்டோம் என பதட்டம் அடைந்து உடனடியாக தனது உறவினரான எஸ்பிசிஐடி ஏட்டு நந்தகுமாருக்கு போன் செய்து பிரச்சனையாகி விட்டது உடனடியாக வருமாறு சசிகலா கூறியிருக்கிறார். அதற்குள்ளாக ஸ்டேஷனில் பதிவான காட்சிகளை தன்னுடைய செல்போனில் சசிகலா டவுன்லோடு செய்துள்ளார். அங்கு வந்த நந்தகுமாரிடம் விபரத்தை கூறிய சசிகலா தனனு செல்போனில் இருந்த காட்சிகளை, அவரது செல்போனுக்கும் அனுப்பியுள்ளார். 

 

 

தற்போது சசிகலா டி.எஸ்.பி ராதகிருஷ்ணன் விசாரணையில் நான் வீடியோவை வெளியிடவில்லை வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து எஸ்பிசிஐடி ஏட்டு நந்தகுமார்தான் வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்கிறார்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம். 

 

இதற்கு இடையில் முதற்கட்ட விசாரணை முடிவில் தீடீர் முத்தம் கொடுத்த எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

அதே நேரத்தில் புகார் கொடுத்த சசிகலா வீட்டிலும் சென்று போலிஸ் சோதனை நடத்தி வருகிறார்கள். முத்த சர்ச்சையில் சிக்கியா சசிகலாவிற்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அதே போல எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணனனுக்கு கல்யாணம் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்