
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. மதுரையில் கரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் அதன் பாதிப்பு இருந்து வருகின்றது. இதற்கிடையே, தேனி மாவட்டத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து நாளை மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.