Skip to main content

காணாமல் போன பள்ளிமாணவி எலும்பு கூடாக கிடந்ததால் பரபரப்பு!  பலாத்காரம் செய்து கொலையா? போலீஸ் விசாரணை!

Published on 11/02/2019 | Edited on 12/02/2019
s

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலூக்கா புதுவெங்கடாபுரத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி, எல்லாம்மாள் தம்பதியின் மகள் சரிதா.   இவர் பக்கத்து கிராமமான கீச்சளம் அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

 

கடந்த 2018 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி காலை வழக்கம் போல சரிதா பள்ளிக்கு சென்றார்.   சரிதாவின் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.    வழக்கமாக பள்ளிக்கு செல்லும் போது,  தங்கள் வீட்டில் கறந்த மாட்டுபாலை எடுத்துக்கொண்டு போய்,  பள்ளிக்கூடம் அருகே உள்ள  கீச்சளத்தைச்சேர்ந்த பாஸ்கரன் என்பவர் வீட்டில் கொடுத்துவிட்டு செல்வது சரிதாவின் வழக்கம்.   அதே போல் சம்பவத்தன்று  புத்தக பையுடன் பாலை எடுத்து சென்ற சரிதா மாலை  வீடு திரும்பவில்லை.

 

s


 இதையடுத்து சரிதாவின் பெற்றோர் பாஸ்கரனை கேட்டபோது, சரிதா இன்று பால் கொண்டுவரவில்லை என்று அவர்களிடம் கூற,  உடனே பள்ளியில் விசாரித்தபோது,  அன்று காலை முதலே பள்ளிக்கு வராததும் தெரியவந்தது.    நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சரிதாவின் பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல் ஆய்வாளர் அண்ணாதுரையிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்திவர,  சரிதாவின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

s


 5 மாதங்கள் ஆகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.    இந்தநிலையில்  பிப்ரவரி  11 தேதி மாலை கீச்சளம் கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி சுரேஷ் என்பவர் வேலை முடிந்து கீச்சளம் ஏரி ஓடை அருகே பள்ளி சீறுடையில் எலும்பு கூடுடன் கிடந்ததை பார்த்து அதிர்தார்.    உடனே சுரேஷ் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தர,   விரைந்துவந்த போலீசார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் பிரேதத்தை கைபற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.  முதல் கட்ட விசாரணையில் சரிதாவின் பெற்றோர் சரிதாவை அடையாளம் காட்டினர்.   இருப்பினும் எலும்பு கூடாக  உள்ளதால் டி.என்.ஏ மரபணு சோதனை செய்யவுள்ளனர்.   சம்பவம் தொடர்பாக சரிதா பால் எடுத்து சென்ற பாஸ்கரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

  இது தொடர்பாக நாம் மாவட்ட எஸ்.பி பொன்னியிடம் பேசியபோது,   " விசாரணையை தொடங்கியுள்ளோம்.  விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்’’ என்று முடித்துக்கொண்டார்.

 

மாணவி சரிதா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.