Skip to main content

பஸ்சும் வேனும் நேருக்குநேர் மோதி இருவர் பலி! 30 பேர் படுகாயம்!!

Published on 20/01/2019 | Edited on 20/01/2019

 

accident

 

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகிறார்கள். அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை எம்.எஸ்.நகரை சேர்ந்த 20  பேர் ராமநாதபுரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக சென்று விட்டு மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று பழனியில் இருந்து  வேனில் ராமநாதபுரம் புறப்பட்டனர்.

 

இந்நிலையில் திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலையில் உள்ள பாலராஜக்கபட்டி  அருகே திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் சென்ற அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியது. வேனில் 20 பேர் மற்றும் அரசுப் பேருந்து 50 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து 10 கிலோ மீட்டர் அருகே உள்ள பாலராஜக்காபட்டி என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளது. இதில் அரசு பேருந்தில் வந்த  ஒருவரும் வேனில் வந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

 

இந்த விபத்தின் காரணமாக சம்பவ இடத்திலேயே பத்மா,தங்கம்மாள் ஆகிய இருவர் பலி 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்