Published on 21/07/2020 | Edited on 21/07/2020
![face mask](http://image.nakkheeran.in/cdn/farfuture/YXRk5vuq33aGzuAWuFrgN2fVCmVec2B4Ymx9zb9nzu4/1595308680/sites/default/files/inline-images/602_52.jpg)
நீலகிரியில் கரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை இருந்தது. அதனால் பச்சை மண்டலமாக நீலகிரி வெகு காலம் பெயரைத் தக்கவைத்து இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி கரோனாவால் மலையே நடுங்குகிறது. வெளி மாவட்ட ஆட்கள் நுழைவது பெரிய கடினம் என்கிற நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா செயல்படுகிறார்.
இந்த நிலையில் இப்போது புது உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இல்லையென்றால் ஆறு மாதச் சிறைத் தண்டனை கொடுக்கப்படும் என்கிற உத்தரவு தான் அது.
என்னடா அநியாயம்? என்று நீலகிரி மக்கள் முணு முணுத்தாலும், கரோனா பாதிப்பில் நீலகிரி எந்த அளவுக்கு சிக்கலில் இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி ஒரு கடுமையான உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார் என்கிறார்கள் கலெக்டர் அலுவலகத்தினர்.