Skip to main content

திருச்சி முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Employees struggle in front of the office of the  Education Officer, Trichy

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களுக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் புதிய பணியிடங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாநிலத் தலைவர் ராஜராஜன் தலைமையில் நடந்தது. 

 

மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளர் துரைப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள்  எழுப்பப்பட்டன. இதில் மாவட்டத் தலைவர் ரங்கராஜ், மாநில துணை பொது செயலாளர் சிவக்குமார் உள்பட சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உலக போதை ஒழிப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
World Anti-Drug Day; Students awareness rally!

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை ரெயில்வே எஸ்.பி தொடங்கி வைத்தார்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் ரயில் நிலைய நடை மேடைகள் மற்றும் வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர். இதில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமைத் தாங்கினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், சப் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா, லட்சமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், பாலமுருகன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறுகையில் “போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி திருச்சி ரெயில் நிலையம் மட்டும் இன்றி திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 24 மாவட்டங்களிலும் நடைபெற்றது. போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் 3 ரெயில்வே உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

Next Story

“திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Cm MK Stalin announcement for Library in the name of the kalaiganr in Trichy 

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர், “தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேறியுள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.