நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வன காவலர்கள் ரோந்து பணிக்கு சென்றபோது எதிரே ஆக்ரோஷத்துடன் வந்த யானையால் அதிர்ச்சியும், பரவசமும் ஏற்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுவதால், வன விலங்குகளின் நடமாட்டம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சற்று குறைவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு பகுதியில் வனக் காவலர்கள் ரோந்து பணிக்காக தெப்பகாடு வனச் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வாகனத்தில் சென்றபோது, அவர்களின் வாகனத்தின் எதிரே ஒற்றை காட்டு யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் பிளறிக் கொண்டு வாகனத்தை நோக்கி வந்தது.
இதை சற்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதில் ஒருவர் கோ பேக் என சொல்லுகிறார். இன்னொருவர் அப்படியே நிற்க சொல்லுகிறார். யானை அருகில் வரும் என எதிர் பார்க்காத அவர்கள் மிரண்டு, அதிர்ச்சியானார்கள். பிறகு வாகனத்தின் அருகே யானை வந்ததும், வனத்துறையினர் சத்தம் செய்ததால் திரும்பிச் சென்றது.