Published on 19/05/2022 | Edited on 19/05/2022

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.