Published on 10/12/2019 | Edited on 10/12/2019
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என தீர்ப்பு அளித்துள்ளது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் பழைய அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு, மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்ற புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.