![eps - ops](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z7Ib8T5UArf-hu3ddGmzhbTHXh3zv79-lY_lSalhSwU/1533347648/sites/default/files/inline-images/eps%20-%20ops%206001.jpg)
திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்தேன் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் விசாரிக்க இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கலைஞர் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரை நேரில் சென்று சந்தித்தனர்.
![eps-mkstalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/e9JQQKmpXt_FpOxuNAEVYiUt6_Ro6zKAlkW8ry_PQw0/1533347648/sites/default/files/inline-images/eps-mkstalin600.jpg)
பின்னர் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உடல்நலக்குறைவால் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கலைஞரின் உடல் தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகச்சை பிரிவில் உள்ள கலைஞரை மு.க.ஸ்டாலின், கனிமொழியுடன் நானும், துணை முதல்வரும் நேரில் சென்ற பார்த்தோம். கலைஞரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர் என அவர் கூறினார்.