கோவையை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மயக்க மருந்துகளை திருடி போதை மருந்தாக மாற்றி விற்று வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் மயக்க மருந்தை போதை ஊசியாகமாற்றி விற்பதாக காவல் துறைக்கு வந்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போர்ட்பின் என்ற அறுவைசிகிச்சைக்கு முன்னும், விபத்து காலத்திலும் கொடுக்கப்படும் ஒருவகை மயக்க மருந்தை திருடி அதனுடன் சில உப மருந்துகளை சேர்த்து போதை மருந்தாக மாற்றி ஊசி மூலம் போதை ஏற்றிக்கொள்ளும்படி, கோவை கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரில் கோவையை சேர்ந்த அப்துல்ரகுமான், மகேந்திரன் , அஜய் , அசோக், ரோகித் என ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விசாரணையில், குறிப்பிட்ட போர்ட்பின் மயக்க மருந்தானது குளுக்கோசுடன் சேர்க்கப்படும் பொழுது போதை ஏற்படுவதைதெரிந்து கொண்ட நாங்கள், கடந்த ஒன்றரை வருடமாக கோவையை சுற்றியுள்ள மருதத்துவமனைகளில் மயக்க மருந்துகளை திருடி குளுக்கோசுடன் சேர்த்து போதை மருந்தாக கோவை மற்றும் பெங்களூர் பகுதிகளுக்கு விற்பனை செய்துவந்தோம் என ஐவரும் கூறியுள்ளனர். மேலும் பெங்களூருவில் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, போலீசார் தொடர்ந்து பலகோணங்களில் விசாரித்து வருகின்றனர்.