Published on 20/04/2022 | Edited on 20/04/2022
![Attempt to snatch jewelery from three year old girl ... Arrested till he came to sell Kolamavu!](http://image.nakkheeran.in/cdn/farfuture/O4zKxUveLKajXnhNQqcjYavf1ZAR0ww0-v2N5BP6fK8/1650478580/sites/default/files/inline-images/TRYRR5.jpg)
3 வயது சிறுமியிடம் தங்க நகை பறிப்பில் ஈடுபட்ட கோலமாவு வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனி பக்தவச்சலம் காலனியைச் சேர்ந்தவர் தாமோதரன்-அபிராமி தம்பதியினர். இவர்களது மூன்று வயது மகள் கிருத்திகா இன்று காலையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கோலமாவு விற்பனை செய்ய சைக்கிளில் வந்த மரியன் என்ற நபர் அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது 3 வயது சிறுமி கிருத்திகாவிடம் பேச்சுவார்த்தை கொடுத்தபடி கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்க நகையை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், தப்பிச் செல்ல முயன்ற கோலமாவு வியாபாரியை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வடபழனி ஆர்.8 போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.