ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய பாஜக மோடி அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்ஆர்எம்யு) சார்பில் இன்று ஆர்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டம் ஈரோட்டில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்ஆர்எம்யு செயலாளர் தர்மன் சேலம் கோட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்கள்.
நாட்டில் ஐம்பது ரயில்வே ஸ்டேஷன்களையும், நல்ல லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க கடந்த 10ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தனியாரிடம் ரயில்வேயை ஒப்படைக்கும் நோக்கில் அறுபது வயதுக்கு முன்பே ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். சிசிஎஸ் விதியின் கீழ் ஊழியர்களை திறமையற்றவர்கள் என பழிசுமத்தி பணியில் இருந்து நீக்கும் உத்தரவை உடனே திரும்ப பெறவேண்டும். பணிமனைகளை ஐஆர்ஆர்எஸ்சி என்ற கார்ப்ரேட் நிறுவனத்தின் கீழ் கொண்டு வரக்கூடாது. அனைவருக்கும் நிரந்தர வேலைவாய்ப்பினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சகோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மத்திய அரசின் உத்தரவு நகல், மற்றும் அமிதாப் காந்த் தலைமையிலான கமிட்டியால் போடப்பட்ட ரயில்வே நிலையங்ககள் , ரயில்களையும் தனியாரிடம் ஒப்படை போடப்பட்ட உத்தரவு நகலையும் எரித்து ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய அரசு அறிவித்த நாளை கருப்பு தினமாக அறிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு உடைகள் அணிந்தும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.