Published on 06/12/2019 | Edited on 06/12/2019
ஈரோடு மாவட்டதில் சராசரி மழைப் பொழிவு 702.43 மி.மீ பதிவாகியுள்ளது. விவசாயத்தில் கரும்பு,மஞ்சள், நெல் இங்கு முக்கிய சாகுபடியாக உள்ளது. மழை பொழிந்தால் தான் விவசாய தேவைகளுக்கு வாய்க்கால்களில் நீர் திறப்பு இருக்கும் என்பதால் விவசாயிகள் பருவ மழையை நம்பியே உள்ளார்கள்.
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை ஈரோடு மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான ஏரிகள், குளம், குட்டைகள், நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் பொதுவாக வடகிழக்கு பருவமழை 286.60 மி.மீ பதிவாகும். ஆனால் தற்போது 311.11 மி.மீ பதிவாகி கூடுதலாக 25 மி.மீ பெய்துள்ளது.
இவ்வாறு பெய்யும் தொடர் மழையால், இந்த வருடம் மட்டுமில்லாது வரும் அடுத்த ஆண்டு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படாத வகையில் மழைப்பொழிவு உள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.