



Published on 01/03/2022 | Edited on 01/03/2022
மு. கதிரேசன் எழுதிய நெல்லவிக்கும் படலம் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல் நூலினை எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் வெளியிட முதல் பிரதியை நக்கீரன் ஆசிரியர் பெற்றுக்கொண்டார். வாழ்த்துரை எஸ். சுரேஷ்குமார் வழங்க, பொது மேலாளர் இந்தியன் வங்கி சென்னை மு.கதிரேசன் ஏற்புரை வழங்கினார். சுப்பையா முத்துக்குமாரசுவாமி நன்றியுரை வழங்கினார்.