



Published on 03/11/2021 | Edited on 03/11/2021
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது மரணமடைந்த 4 காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3,00,000 வீதம் வழங்கினார்.
கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன், கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், எடமலைப்பட்டிப்புதூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் முருகையன் மற்றும் காவல் கட்டுப்பாட்டறையில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் பிச்சைபிள்ளை ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3,00,000 வீதம் மொத்தம் 4 குடும்பங்களுக்கு ரூ. 12,00,000 வழங்கப்பட்டது.